எழும்பூர் ரயில் நிலையத்தில் கடத்தல் அரிசி பறிமுதல்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சட்டவிரோதமாக கடத்தப்படும் பொருட்களைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் ரயில்வே போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கஞ்சா, ரேஷன் அரிசி போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தல் நபர்கள் கைது செய்யப்படுகின்றனர். இன்ஸ்பெக்டர் ஜெபஸ்டின் தலைமையில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 200 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனர். இந்த அரிசி மேல் நடவடிக்கைக்காக சி. ஐ. டி. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி