ராயபுரத்தில், மன்னார் சாமி கோவில் தெருவில் வாகன சோதனையின் போது, டி.வி.எஸ். ஜுப்பிட்டர் ஸ்கூட்டரில் கஞ்சா கடத்தி வந்த பழவேற்காட்டைச் சேர்ந்த யாகூப் (38) மற்றும் எடப்பாளையத்தைச் சேர்ந்த மாதவன் (32) ஆகியோரை போக்குவரத்து போலீசார் கைது செய்தனர். மாதவன், யாகூபிடம் கஞ்சா வாங்கியதும் தெரியவந்தது.