சென்னையில் மூன்றாவது நாளாக ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் அவதி

சென்னையில் மூன்றாவது நாளாக புறநகர் மின்சார ரயில் சேவைகள் திடீரென குறைக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வழக்கமாக ரயிலில் பயணிப்பவர்கள், மெட்ரோ ரயில்களை நாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், மெட்ரோ ரயில் நிலையங்களில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த திடீர் ரயில் சேவை குறைப்பு சென்னையின் போக்குவரத்து முறையையே பாதித்துள்ளது.

தொடர்புடைய செய்தி