வடசென்னையைப் பொறுத்தவரை இது ஒரு வளர்ந்த சென்னையாக நிச்சயமாக இந்த ஓராண்டுக்குள் உருவாகும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அந்தப் பணிகளைத்தான் இன்றைக்கு நான் ஆய்வு செய்தேன் என்றார். காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் குறித்து தேடுதல் குழுவை ரத்து செய்து ஆளுநர் அறிவித்திருக்கிறார். அவர் தொடர்ந்து இந்த வேலைகளைத்தான் செய்துகொண்டு இருக்கிறார். அதுகுறித்து நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறோம். பெரியாரை மரியாதை குறைவாக பேசக்கூடியவர்களுக்கெல்லாம் நான் மரியாதை கொடுக்க தயாராக இல்லை. ஏனென்றால், பெரியார்தான் எங்களுக்கு தலைவர். எங்கள் தலைவர்களுக்கெல்லாம் தலைவர் அவர்தான். அதனால், அதை நாங்கள் பெரிதுபடுத்தவும் தயாராக இல்லை, பொருட்படுத்தவும் தயாராக இல்லை என்று தெரிவித்தார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்