அதன்பின் அமலாக்கத் துறையும் அதையே சொல்கிறது. மற்றொருவர் ரூ. 40,000 கோடி முறைகேடு என்று சொல்கிறார். பொய் குற்றச்சாட்டுகளை சுமத்த அமலாக்கத் துறையை மத்திய அரசு ஏவுகிறது. டெண்டர் முறையில் வெளிப்படைத் தன்மை கடைபிடிக்கப்படுகிறது, எந்த முறைகேடும் இல்லை. டாஸ்மாக் பணி நியமனம், பணியிட மாற்றம் செய்யப்பட்டதில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை. டாஸ்மாக்கில் தவறு நடந்ததை போல் தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்யப்பட்டு உள்ளது என்றார். 4 ஆண்டு காலங்களாக டாஸ்மாக் நிறுவனத்தின் பாரத் டெண்டர்கள் முதல் அனைத்து டெண்டர்களும் ஆன்லைன் முறையில் எடுக்கப்படுகிறது. பொதுவாக ஆயிரம் கோடி என சொல்கிறார்கள். டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடி ஊழல் என்ற குற்றச்சாட்டை எந்த ஆவணத்தின் அடிப்படையில் முன் வைக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
2026 வேட்பாளர்கள்.. தவெக முக்கிய அறிவிப்பு