அவ்விபத்துகள் பற்றி ஆய்வுசெய்தபோது, மோட்டார் வாகனங்களில் மாறுதல்களைச் செய்யும்போது, சிஎன்ஜி, எல்பிஜி போன்றவற்றை மாற்றும்போது, அதற்கான அங்கீகரிக்கப்படாத அல்லது தகுதியில்லாத நிறுவனங்களால் மாற்றம் செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
இதனாலேயே வாகனங்கள் தீவிபத்துக்குள்ளாகின்றன. வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்யப்படுவது மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் விதிகளின்படி குற்றமாகும். எனவே, வாகன உரிமையாளர்கள் இவ்வகையான செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.