அதனைத் தொடர்ந்து, 12.03.2025 அன்று மூன்றாவது முறையாக மாநிலம் முழுவதும் தமிழ்நாடு வணிகவரித்துறையின் நுண்ணறிவுப் பிரிவின் மூலம் சீரியமுறையில் திட்டமிடப்பட்ட தீவிர செயலாக்க தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 318 போலிப்பட்டியல் வணிகர்கள், ரூபாய் 951.27 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டது. குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கிவரும் திருவா. மெட்ரோ எண்டர்பிரைசஸ் என்ற வணிக நிறுவனத்தை சென்னை-2 நுண்ணறிவுக் கோட்டப் பிரிவினர் ஆய்வு செய்து, ரூபாய் 12.46 கோடி அளவில் உள்ளீட்டு வரி போலியாகத் துய்த்து, அரசுக்கு வரி இழப்பு ஏற்படுத்தியதை கண்டறிந்து, அதன் உரிமையாளர் ஜெயபிரகாஷ் மற்றும் பஷீர் அகமது ஆகியோரை 21.03.2025 அன்று கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடனா நீர்த்தேக்கத்திலிருந்து 664.60 மி.கன அடி தண்ணீர் திறப்பு!