இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதாலும், ஜனவரி 15, 16, 18 மற்றும் ஜன. 19 ஆகியவை அரசு விடுமுறை நாட்கள் என்பதாலும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில், அதற்கு இடைப்பட்ட நாளான ஜன. 17 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.
அக்கோரிக்கைகளை ஏற்று, ஜன. 17 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும், அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஜன. 25 (சனிக்கிழமை) அன்று பணிநாளாக அறிவித்தும் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.