மடிப்பாக்கம்: மடிப்பாக்கம் சபரி சாலையில் சூப்பர் மார்கெட் நடத்தி வரும் பேரின்பராஜாவிடம், உறவினர் ஜியோசுகன் மூலம் அறிமுகமான ஜான் என்பவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக கூறி, 2023 மற்றும் 2024ல் இரு தவணைகளாக 10 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். பணத்தை மூன்று மாதங்களில் திருப்பி தருவதாக கூறிய ஜான், ஏமாற்றியதால், பேரின்பராஜா மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், ஜானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.