அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள ராஜீவ் குமார், அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி, ஆலோசனைகளைப் பெற்று, சட்ட விதிகளுக்கு உட்பட்டு தீர்வுகாண வேண்டும்.
அது தொடர்பான விவரங்களை மார்ச் 31-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வரும் 18-ம் தேதி ஆலோசனை நடத்த உத்தேசித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.