சென்னை புரசைவாக்கம் அருகே அரசுப் பேருந்தில் பயணித்த ரேவதி என்ற பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை சரண் என்ற இளைஞர் திருட முயன்றார். பேருந்து சிக்னலில் நின்றபோது ஜன்னல் வழியாக கைவிட்டு செயினைப் பறித்த இளைஞரை, அங்கு பணியிலிருந்த போக்குவரத்து காவலர்கள் துரத்திப் பிடித்து, செயினை மீட்டனர். இளைஞர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.