ஆப் பாயில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர்

சென்னையில் காகங்கள் பறவைக் காய்ச்சலால் இறந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கோழிப் பண்ணைகளில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எச்5என்1 வைரஸ் பரவலைத் தடுக்க கால்நடை பராமரிப்புத் துறை கண்காணிப்பை மேம்படுத்தியுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில், "தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. மனிதர்களுக்கு பாதிப்பு இல்லை. முன்னெச்சரிக்கையாக ஹாஃப் பாயில் சாப்பிடுவதை தவிர்க்கவும், இறைச்சியை நன்கு வேக வைத்து உண்ணவும், இறந்த பறவைகளை ஆழமாக புதைக்கவும்" என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி