தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காவிரி விவகாரத்தில் அதிமுக சார்பில் மேற்கொள்ளப்பட்ட சட்டப் போராட்டங்களை பட்டியிலிட்டார். பின்னர், "காவிரி நீர் சம்பந்தமாக, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, கர்நாடக அரசு காவிரியில் தண்ணீரை திறக்க வேண்டும். அதை வலியுறுத்த வேண்டும் என தீர்மானத்தில் தெரிவிக்க வேண்டும்" என்றார்.
அப்போது குறுக்கிட்ட தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், "நான், என்னுடைய தீர்மானத்தைப் படிக்கிறபோது, தெளிவாக படித்திருக்கிறேன். உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழகத்துக்கு தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை பேரவை ஒருமனதாக கேட்கிறது. தீர்மானத்தில் ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன்" என்றார்.