சென்னையில் 1. 22லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தல்

சென்னை மாநகராட்சிப் பகுதியில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் ஆகஸ்ட் 9-ஆம் தேதி தொடங்கின. இதுவரை 1 லட்சத்து 22 ஆயிரத்து 625 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. செல்லப்பிராணிகளுக்கு உரிமம், மைக்ரோசிப், தடுப்பூசி வழங்கும் சிறப்பு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் 23-ஆம் தேதி நடைபெறும். டிசம்பர் இறுதிக்குள் அனைத்து தெரு நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். 24-ஆம் தேதிக்குள் செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோசிப் பொருத்தி, உரிமம் பெறாதவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி