நாளைய முதல்வர்: திருமாவளவனை வரவேற்று பேனர்: பரபரப்பு

சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில், ஒரு கோடி பேர் வாக்குரிமையை இழக்கும் நிலை ஏற்படும் என்றும், மத்திய பா.ஜ.க. அரசு உள்நோக்கத்தோடு செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். ஆர்ப்பாட்டத்தில் 'நாளைய முதல்வர்', 'மக்களின் முதல்வர்' போன்ற வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி