சென்னை: 4 நாட்களுக்கு கொளுத்த போகும் வெப்பம்.. வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் 4 நாட்களுக்கு வெப்பம் கொளுத்தும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிய நிலையில், மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும், நேற்றைய தினம் தமிழ்நாட்டில் குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் 99 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெப்பநிலை குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது, தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இன்று (17. 03. 2025) முதல் வருகின்ற மார்ச் 20 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட2- 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும்” என அறிவித்துள்ளது. மேலும், “சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 34 -35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 -26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும்” என்றும் தெரிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் தேவை இல்லாத காரணங்களுக்காக பிற்பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில், தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல், 22ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி