ஆட்சியருக்கான தனி எழுத்தரின் பணி விவரங்கள் வெளியீடு

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கல்வி செயல்பாடுகளுக்காக நியமிக்கப்பட்ட தனி எழுத்தரின் பணி விவரங்களை பள்ளிக் கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச. கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: 'பள்ளிகளில் கல்வி முறைகள் மற்றும் தரநிலைகளை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதந்தோறும் ஆய்வு நடத்தப்பட வேண்டுமென தலைமைச் செயலர் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி மாவட்டக் கல்வி ஆய்வு, கல்வி வளர்ச்சி குறைதீர் நாள், மாவட்ட கண்காணிப்புக்குழு மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகள், அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் போன்ற பணிகளை கண்காணிக்க எல்லா மாவட்டங்களிலும் ஆட்சியரின் கீழ் கல்வி செயல்பாட்டுக்காக தனி எழுத்தர்கள் (பெர்சனல் கிளர்க்) நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி