சென்னை: சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த வாலிபருக்கு பாராட்டு

மதுரவாயலைச் சேர்ந்த 39 வயது காளீஸ்வரன், நேற்று முன்தினம் இரவு டி.என். நகர் வழியாக பைக்கில் சென்றபோது, சாலையில் கிடந்த பிளாஸ்டிக் பையை எடுத்துப் பிரித்துப் பார்த்தார். அதில் ₹53,770 இருந்தது. உடனடியாக அவர் அந்தப் பணத்தை கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரது நேர்மையான செயலைப் போலீசார் வெகுவாகப் பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி