சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, வரும் 20ம் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை 45 நாட்களுக்கு, புறநகர் ரயில்கள் 5 மற்றும் 6 ஆம் நடைமேடைகளில் இருந்து இயக்கப்படும். இந்த காலகட்டத்தில், தற்போதைய மின்சார ரயில் சேவை அட்டவணை மாற்றப்பட்டு, தற்காலிக ரயில் நேர அட்டவணை வெளியிடப்படும். மேலும், ஞாயிற்றுக்கிழமைகளுக்கான தனி நேர அட்டவணை கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.