சென்னையில் உள்ள ஜெயின் கோவிலில் இருந்து 10 கிலோ எடையுள்ள 5 வெள்ளி கிரீடங்கள் மற்றும் சாமி சிலைகளின் நெற்றியில் இருந்த சுமார் 600 கிராம் தங்கப்பட்டைகளை திருடிய வழக்கில் தலைமறைவாக இருந்த மாராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஜீவன்சிங் என்பவரை யானைகவுனி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.