நிலக்கொடி கடற்கரை பணிகள் தீவிரம்

சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தூய்மையான கடற்கரைகளுக்கு வழங்கப்படும் நீலக்கொடி சான்றிதழ் கோவளம் கடற்கரைக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா, கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி கடற்கரைகளுக்கும் இந்த சான்றிதழ் பெற தமிழக அரசு முயன்று வருகிறது. மெரினாவில் நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் பெறுவதற்கான திட்டப் பணிகள் நான்கு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக ரூ. 7.31 கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக ரூ. 7 கோடி மதிப்பீட்டில் 90% பணிகள் முடிந்து இந்த மாதம் இறுதியில் திறக்கப்பட உள்ளது. இதில் 60 மூங்கில் இருக்கைகள், 30 மூங்கில் குடைகள், 4 கண்காணிப்பு கோபுரங்கள், சிறுவர் விளையாட்டு பகுதி, படிப்பகம், செல்பி பாயிண்ட் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி