கஸ்தூரிபாய் நகரில் குப்பைகள் அகற்றம்

சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரில் சாலையோரத்தில் குப்பைகள் சேமிக்கப்பட்டதால் ஏற்பட்ட துர்நாற்றம் மற்றும் நோய் தொற்று அபாயம் குறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, சென்னை பெருநகர மாநகராட்சி ஊழியர்கள் இன்று சாலையோரத்தில் இருந்த குப்பைகளை அகற்றி அப்பகுதியை சுத்தம் செய்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி