மாநகராட்சி பெயரில் போலி ரசீது கொடுத்து மோசடி: விசாரணை

சென்னை, அசோக் நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன பொது மேலாளர் பாபு (49), 2024-2025 ஆம் ஆண்டுக்கான தொழில் வரியாக ரூ.5 லட்சத்து 41 ஆயிரத்து 325-ஐ வரி செலுத்தும் முகவர் பிரபு (43) என்பவரின் வங்கி கணக்கிற்கு நவம்பர் 15, 2024 அன்று அனுப்பியுள்ளார். ஆனால், பிரபு போலி ரசீதை அனுப்பியுள்ளார். அடுத்த ஆண்டு வரி செலுத்தச் சென்றபோது, கடந்த ஆண்டு ரூ.50 ஆயிரம் மட்டுமே செலுத்தப்பட்டதாகவும், மீதமுள்ள ரூ.5 லட்சம் நிலுவைத் தொகை இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாபு, அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் பிரபுவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி