தாய்லாந்து நாட்டில் கைநிறைய சம்பளத்தோடு வேலை வாங்கி தருவதாக கூறி ஏராளமான தமிழக இளைஞர்களை, குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களை சுற்றுலா விசா மூலம் ஏமாற்றி மியான்மர் நாட்டில் உள்ள கே. கே. பார்க் என்ற பகுதியில் தவிக்கவிட்ட மோசடி கும்பல் மீது தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட ராஜ்குமார், மணவாளன், தீபக், அபிஷேக், ராஜன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.