யானை சின்னம் வழக்கு: தவெக பதில் மனு

தவெக கட்சி கொடியில் யானையை பயன்படுத்தப்பட்டுள்ளதை போல உதய சூரியன், அண்ணா, கை போன்ற படங்களை திருத்தம் செய்து மற்ற கட்சி கொடிகளில் பயன்படுத்த திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அனுமதிக்குமா? என கட்சிக் கொடி தொடர்பான வழக்கில் பகுஜன் சமாஜ் சார்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. 

சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்ற இளங்கோவன் தாக்கல் செய்த மனுவில், "தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும்," என்று கோரியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், தவெக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என். ஆனந்த் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. 

இந்த வழக்கில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் பதில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை ஜூலை 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் இதுகுறித்து விளக்கம் அளிக்க தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி