தமிழ்நாடு மின்சார வாரியம், நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரத்தை கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கிறது. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்போது மின் கட்டணத்தில் மாற்றம் செய்து வருகிறது. 100 யூனிட் வரை இலவசம், 200 யூனிட் வரை குறைந்த கட்டணம் என்றாலும், 300 யூனிட் மேல் சென்றால் கட்டணம் கணிசமாக உயர்கிறது. மின் கட்டணம் கணக்கீட்டில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வருகின்றன. இதனால், வீடுகளுக்கு கூடுதல் மின் கட்டணம் வந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நுகர்வோர் முறையிடலாம் என்றும், தவறு இருந்தால் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.