சென்னை: கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பு; ஸ்டாலின் தலைமையில் மாபெரும் விழா

எழும்பூர் கன்னிமாரா பொது நூலக அருங்காட்சியக வளாகத்தில், உலக மாமேதை கார்ல் மார்க்ஸின் திருவுருவச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் CPIM மாநில செயலாளர் P.சண்முகம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு. செல்வப் பெருந்தகை, விடுதலை சிறுத்தை தலைவர் தொல். திருமாவளவன், திரு. வைகோ, T.R. பாலு MP, அமைச்சர்கள் மா.வ.வேலு, சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், சென்னை மாநகர மேயர் மற்றும் அரசு அதிகாரிகள் என பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி