மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தில் 9ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவனுக்கு துணை நடிகர் 'ஆலப்பாக்கம் ஹரி' என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது, அதன்பேரில் சினிமா துணை நடிகர் ஆலப்பாக்கம் ஹரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.