சென்னை: கைதான சீமான் விடுவிப்பு

வள்ளூவர் கோட்டம் அருகே தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் நிரந்தரப்படுத்த கோரி இந்தப் போராட்டம் நடந்தது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவிக்க வந்தபோது, போலீசார் அவரைத் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களையும், சீமானையும் போலீசார் கைது செய்தனர். சீமான் சில மணிநேர தடுப்பு காவலுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி