சென்னை: ஒரேநாளில் 36 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று (ஏப்ரல் 8) ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில், புவனேஸ்வரிலிருந்து புதுச்சேரி சென்ற விரைவு ரயிலில் 31 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ.16 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் புருலியா எக்ஸ்பிரஸ் ரயிலில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2.5 லட்சம் ஆகும்.

தொடர்புடைய செய்தி