சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இதனால், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி