சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த நோவா (20), நுங்கம்பாக்கத்தில் உள்ள 'ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்' விற்பனை நிலையத்தில் பணிபுரிகிறார். நுங்கம்பாக்கம், உத்தமர் காந்தி சாலையில் ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றபோது, வாகனத்தில் இருந்து புகை வந்துள்ளது. சாலையோரம் நிறுத்தி பார்த்தபோது, வாகனம் தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். நுங்கம்பாக்கம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.