20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக காவிரி உள்ளது. காவிரி நீரை பெறுவதற்காக பல வழக்குகள் தொடுக்கப்பட்டது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்று தடை ஆணை பெற்றார்கள்.
உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வேண்டும். நமக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா உரிய முறையில் திறந்து விடுவது தான் நியாயமானது.
உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற வார்த்தையை தீர்மானத்தில் இணைக்க வேண்டும்
பயிற்கள் கருகிவிட்டது. அதற்கு யார் பொறுப்பு. திமுக எம். பி. க்கள் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை. இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றபோது நட்பின் அடிப்படையில் கேட்டிருக்கலாம். எங்களிடம் இருந்த துணிச்சல் ஏன் உங்களிடம் இல்லை. தேசிய கட்சிகள் இரட்டை நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.
தனித்தீர்மானத்தை ஆதரிக்கிறோம். கர்நாடகாவில் இருந்து தண்ணீரை பெற அதிமுக துணை நிற்கும். கவனமாக இருந்து தண்ணீரை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த 6 மாத குடிநீர் தேவைக்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? அவர் கூறினார்.