அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட, ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி உயர்வு மற்றும் மயானபூமி அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்குவது ஆகிய இரு தீர்மானங்கள் கண்டனத்துக்குரியது.
பாமக நிறுவனர் ராமதாஸ்: மக்களை பாதிக்கும் வகையிலான சொத்துவரி உயர்வு கடுமையாக கண்டிக்கத்தக்கது. மக்களை முட்டாள்களாக நினைத்து இவ்வளவு சுமைகளை சுமத்துவதை அனுமதிக்க முடியாது.
தமாகா தலைவர் ஜி. கே. வாசன்: மாநில அரசு சார்பில் மாநகராட்சி பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் சொத்துவரி உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழக மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றும் நடவடிக்கைகளில் அரசு இனியும் ஈடுபட வேண்டாம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் சென்னை மாநகராட்சியின் செயல்பாடு கடும் கண்டனத்துக்குரியது.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து கவனம் செலுத்த வேண்டிய அரசு, சொத்து வரியை உயர்த்துவதால் மக்களின் எதிர்ப்பை தான் பெற முடியும்.