சென்னை பெரம்பூரில் நேற்று கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள், அவ்வழியே சென்றவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, இரும்பு ராடால் 8 கார்கள் மற்றும் 5 ஆட்டோக்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.