கோடம்பாக்கத்தில் கணவருடன் கோழி இறைச்சி வாங்கச் சென்ற ஸ்ரீபிரியாவிடம் இருந்து செல்போனைப் பறித்துத் தப்பிய வாலிபரை போலீசார் கைது செய்து, செல்போனை மீட்டனர். நேற்று முன்தினம் ரயில்வே பார்டர் சாலையில் நடந்த இச்சம்பவம் குறித்து, ஸ்ரீபிரியா அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். செல்போனைப் பறித்த வேலூர், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை நேற்று கைது செய்து, அவரிடமிருந்து செல்போன் மீட்கப்பட்டது.