காவல் நிலையத்தில் பெண் காவலர் ஆர்த்தி மட்டும் இருந்தார். இதனால் அவர், காலையில் வந்து எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க வேண்டும் என்று கூறி அனுப்பி உள்ளார். உடனே போதையில் இருந்த பெண், வேகமாக காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைத்திருந்த தனது ஸ்கூட்டரில் ஏற்கனவே தயாராக வைத்திருந்த ஒரு லிட்டர் பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி, எனக்கு நீதி வேண்டும். எனது ஆண் நண்பரை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறி தீவைக்க முயன்றார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத பெண் காவலர் ஆர்த்தி, அருகில் இருந்தவர்கள் உதவியுடன் பெண் உடலில் தண்ணீரை ஊற்றி மீட்டனர். பின்னர் சம்பவம் குறித்து இரவு பணியில் இருந்த எம்ஜிஆர் நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அம்முக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் அம்மு, தீக்குளிக்க முயன்ற பெண்ணிடம் விசாரணை நடத்தினார்.