கோயம்பேட்டில் கார் ஏற்றி பெண் கொலை

கோயம்பேட்டில் உள்ள தனியார் மதுபான பாரில் நடனமாடுவதில் யான்சி (18) என்பவர் தரப்புக்கும், மற்றொரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறில் மர்ம நபர் யான்சி சென்ற டூவீலர் மீது காரை ஏற்றியுள்ளார். கார் மோதியதில் யான்சி உயிரிழந்தார். உடன் பயணித்த சிறுமி, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கார் ஏற்றி கொன்றவர்களை கோயம்பேடு போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி