சென்னை தண்டையார்பேட்டை – திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நேற்று திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். விபத்துகளைத் தவிர்க்க, போக்குவரத்து போலீசார் பள்ளத்தைச் சுற்றி இரும்பு தடுப்புகள் அமைத்துள்ளனர். இந்த திடீர் பள்ளம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலையும், அசௌகரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.