காதலிக்க மறுத்த மாணவிக்கு மிரட்டல்: மாணவர் கைது

பரங்கிமலை மகளிர் தங்கும் விடுதியில் தங்கி, தனி யார் கல்லுாரியில் படிக்கும் 20 வயது மாணவி ஒருவரை, அதே கல்லுாரியில் படிக்கும் ராஜிக் முகமது என்பவர் மீண்டும் பழக வற்புறுத்தியுள்ளார். மாணவி மறுத்ததால், தகாத வார்த்தைகளால் பேசி, கீழே தள்ளி மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து மாணவி அளித்த புகாரின் பேரில், பரங்கிமலை போலீசார் வழக்கு பதிந்து, ராஜிக் முகமதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி