சென்னை: அச்சு நிறுவனத்தில் கொள்ளை.. போலீசார் விசாரணை

அம்பத்தூர் பாடி, சத்தியவதி நகரைச் சேர்ந்த கார்த்திக்(32) என்பவர், அம்பத்துார் தொழிற்பேட்டை முதல் தெருவில் நண்பர் பிரகாஷ் உடன் சேர்ந்து 'ஆஸ்ட்ரா பிரிசிஷன் டைஸ்' என்ற பெயரில் அச்சு நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, நிறுவனத்தின் ஷட்டர் உடைக்கப்பட்டு, கட்டர், அளவீட்டு கருவி உட்பட சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி