தமிழக அமைச்சரவையில் மூத்த தலைவரான செங்கோட்டையனிடம் இருந்த நிதித்துறை ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ மரிய வில்சனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி எம்.எல்.ஏ குமாருக்கு 'செயற்கை நுண்ணறிவு' (Artificial Intelligence), தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆளுனர் மாளிகையில் இன்று (மே 21) நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் புதிதாகப் பதவியேற்ற 23 அமைச்சர்களுக்கான துறைகளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.