திருவான்மியூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விக்னேஸ்வரனிடம், ஜெயகுமார் என்பவர் பணம் கேட்டுள்ளார். பணம் தர மறுத்ததால், விக்னேஸ்வரனை தாக்கி 1,000 ரூபாய் பறித்துச் சென்ற ஜெயகுமாரை, திருவான்மியூர் போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் பெசன்ட் நகர் சர்ச் அருகில் கடந்த 14 ஆம் தேதி நிகழ்ந்துள்ளது.