சென்னை கொளத்தூர் தொகுதி, வட்டம் 66, ரெட்டேரி சாலை சந்திப்பில் கட்டப்பட்டு வரும் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தின் இறுதி கட்டப் பணிகளை அமைச்சர் சேகர் பாபு நேரில் ஆய்வு செய்தார். பேருந்து நிறுத்தம் திறப்பு விழா பணிகள் குறித்தும் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆய்வு, பொதுமக்களின் வசதிக்காக மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாகும்.