மளிகை கடையில் திருட்டு: மூன்று பேர் கைது

சென்னை மதுரவாயல், எம். எம். டி. ஏ. , 4வது பிளாக், பிரதான சாலை பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் சுந்தர் என்பவரின் கடையில் கல்லாவில் இருந்த 1,000 ரூபாய் மற்றும் 15 கிலோ இரும்பு ராடு திருடப்பட்டது. இது தொடர்பாக விசாரித்த மதுரவாயல் போலீசார், திருட்டில் ஈடுபட்ட விஜய், ராமாபுரம் திருமலை நகரைச் சேர்ந்த சந்தோஷ், மதுரவாயல் அய்யப்பா நகரைச் சேர்ந்த உதயா ஆகிய மூன்று பேரை நேற்று கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி