சென்னை: குறைந்த வட்டியில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, கயல்விழி என்பவரிடம் ரூ. 38.88 லட்சம் மோசடி செய்த வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட 4 பேரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் 15-க்கும் மேற்பட்டோரிடம் சுமார் ரூ. 2.12 கோடி வரை மோசடி செய்தது அம்பலமானது. கைதான ஜோஸ்பின் பியூலா, சித்ரா, கார்த்திகேயன் மற்றும் தினகரன் ஆகியோரிடமிருந்து போலி முத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.