சென்னை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களால் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில், வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில், மொத்தம் 28,30,936 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 13,65,763 ஆண் வாக்காளர்கள், 14,64,344 பெண் வாக்காளர்கள் மற்றும் 829 மூன்றாம் பாலினத்தவர் அடங்குவர்.