சென்னை: மின் திருட்டு.. அபராத தொகை வசூலிப்பு

தமிழக மின் வாரியத்தின் அமலாக்கபிரிவு அதிகாரிகள், அடையாறில் இம்மாதம் 18ம் தேதி மின்திருட்டு தொடர்பாக திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் இரண்டு மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் ஈடுபட்ட நபர்களிடம் இருந்து 12.39 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையாக மின்வாரியம் வசூலித்துள்ளது. மேலும், குற்றத்தை ஒப்புக்கொண்டு, குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க சமரச தொகையாக 62,000 ரூபாயை கூடுதலாக செலுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி