சென்னை: பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டி தாக்குதல்.. போதை ஆசாமி கைது

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் டில்லிபாபுவின் தங்கையிடம் போதையில் ஆபாச சைகை காட்டிய நெல்லை மாவட்டம் திசையன் விளையைச் சேர்ந்த பிரவீன்(24) என்பவரை கோயம்பேடு போலீசார் கைது செய்தனர். கடந்த 25ம் தேதி இரவு நடந்த இச்சம்பவத்தில், தட்டிக்கேட்ட டில்லிபாபுவையும் அவரது தங்கையையும் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற பிரவீனை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

தொடர்புடைய செய்தி