சென்னை அமைந்தகரையில், கடந்த 31 ஆம் தேதி ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்த 31 வயது பெண்ணுக்கு, டெலிவரி ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, டெலிவரி ஊழியர் லோகேஷை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.